ADDED : ஜூன் 10, 2025 02:10 AM
தேனி: தேனி வழக்கறிஞர் சங்கத்தின் கூட்டரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வக்குமார், இணைச் செயலாளர் லோகநாதன் முன்னிலை வகித்தனர்.
ஆண்டிபட்டி போலீஸ் எஸ்.ஐ., மணிகண்டன் மீது எஸ்.பி., கலெக்டரிடம் புகார் மனு அளிக்கவும், இன்று (ஜூன் 10ல்) ஒருநாள் மட்டும் நீதிமன்ற பணிகளை புறக்கணிக்க வேண்டும்.
போலீஸ் எஸ்.ஐ., மணிகண்டனை கண்டித்து நீதிமன்றம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.