/உள்ளூர் செய்திகள்/தேனி/ குமுளி போலீஸ் எஸ்.ஐ., முதல்வர் பதக்கத்திற்கு தேர்வு குமுளி போலீஸ் எஸ்.ஐ., முதல்வர் பதக்கத்திற்கு தேர்வு
குமுளி போலீஸ் எஸ்.ஐ., முதல்வர் பதக்கத்திற்கு தேர்வு
குமுளி போலீஸ் எஸ்.ஐ., முதல்வர் பதக்கத்திற்கு தேர்வு
குமுளி போலீஸ் எஸ்.ஐ., முதல்வர் பதக்கத்திற்கு தேர்வு
ADDED : ஜூன் 26, 2025 01:56 AM
தேனி: தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தி, சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய 15 போலீசாருக்கு முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு தேனி மாவட்டம் குமுளி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரியும் கதிரேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தென்மண்டல போதைப்பொருள் தடுப்பு பணிக்குழுவில் பணிபுரிந்த காலத்தில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்த, கடத்திய நால்வரை கைது செய்துள்ளார். மேலும் தொடர் கஞ்சா தடுப்பு நடவடிக்கையில் இவர் தலைமையிலான குழுவினர் கடத்தல் குழுவை சேர்ந்தவர்களிடம் இருந்து 1,646 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, 69 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சின்னமனுார் பகுதிகளில் இளைஞர்களுக்கு போதை மருந்து ஊசியை விற்பனை செய்த 14 பேரையும் கைது செய்துள்ளார்.
மேலும் உயர்ரக போதைப் பொருட்களான சல்பேட், மெத்தபெட்டமைன் ஊசி வகைகளின் 98 மருந்து குப்பிகளை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்.
இந்த சிறந்த பணிகளுக்காக, இப்பதக்கத்திற்கு தேர்வாகி உள்ளார். விருது வழங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.