/உள்ளூர் செய்திகள்/தேனி/ குமுளி புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப்பணி பழைய கட்டடத்தில் பயணிகள் நிழற்குடை குமுளி புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப்பணி பழைய கட்டடத்தில் பயணிகள் நிழற்குடை
குமுளி புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப்பணி பழைய கட்டடத்தில் பயணிகள் நிழற்குடை
குமுளி புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப்பணி பழைய கட்டடத்தில் பயணிகள் நிழற்குடை
குமுளி புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப்பணி பழைய கட்டடத்தில் பயணிகள் நிழற்குடை
ADDED : மார் 19, 2025 04:58 AM

கூடலுார், : குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி நடந்துவரும் நிலையில், பழைய கட்டடத்தில் பயணிகள் நிழற்குடை அமைப்பதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என மக்கள் புலம்பியுள்ளனர்.
தமிழக கேரள எல்லையில் குமுளி உள்ளது. இங்குள்ள கேரள பஸ் ஸ்டாண்ட் அனைத்து அடிப்படை வசதியுடன் கூடியதாக உள்ளது. தமிழகப் பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சபரிமலை சீசன் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இந்நிலையில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து போக்குவரத்து துறை சார்பில் பணிகள் நடந்து வருகிறது.
அடிக்கடி மழை பெய்யும் பகுதியாக இருப்பதாலும் கட்டுமானப் பணியை உயரதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தரமாக பணிகள் செய்ய வேண்டுமென தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் ஏற்கனவே அப்பகுதியில் இருந்த பஸ் டெப்போவின் பழைய கட்டடத்தை இடிக்காமல் அதற்கு மேல் பகுதியில் பயன்களுக்கான நிழற்குடை அமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.
இது பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக உள்ளது. கலெக்டர் ரஞ்சித் சிங் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.