/உள்ளூர் செய்திகள்/தேனி/ கேரளா பத்தாம் வகுப்பு தேர்வில் 99.5 சதவீதம் தேர்ச்சி கடந்தாண்டை விட 0.19 சதவிகிதம் குறைவு கேரளா பத்தாம் வகுப்பு தேர்வில் 99.5 சதவீதம் தேர்ச்சி கடந்தாண்டை விட 0.19 சதவிகிதம் குறைவு
கேரளா பத்தாம் வகுப்பு தேர்வில் 99.5 சதவீதம் தேர்ச்சி கடந்தாண்டை விட 0.19 சதவிகிதம் குறைவு
கேரளா பத்தாம் வகுப்பு தேர்வில் 99.5 சதவீதம் தேர்ச்சி கடந்தாண்டை விட 0.19 சதவிகிதம் குறைவு
கேரளா பத்தாம் வகுப்பு தேர்வில் 99.5 சதவீதம் தேர்ச்சி கடந்தாண்டை விட 0.19 சதவிகிதம் குறைவு
ADDED : மே 10, 2025 07:32 AM
மூணாறு: கேரளாவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 99.5 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்தாண்டை விட 0.19 சதவிகிதம் குறைவாகும்.
மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை கல்விதுறை அமைச்சர் சிவன்குட்டி நேற்று மதியம் 3:00 மணிக்கு வெளியிட்டார். தேர்வு எழுதிய 4,26,697 பேரில் 4,24,583 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவிகிதம் 99.5. இது கடந்தாண்டை விட 0. 19 சதவிகிதம் குறைவாகும். மிகவும் கூடுதலாக கண்ணூர் மாவட்டத்தில் 99.87 சதவிகிதம் பேரும் மிகவும் குறைவாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 98.59 பேரும் தேர்ச்சி பெற்றனர். அனைத்து பாடங்களிலும் 100 சதவிகிதம் மதிப்பெண் என்ற அடிப்படையில் 61499 மாணவ, மாணவிகள் 'ஏ பிளஸ்' கிரேடு பெற்றனர்.
மலப்புரம் கல்வி மாவட்டத்தில் மிகவும் கூடுதலாக அனைத்து பாடங்களிலும் 4115 பேர் ' ஏ பிளஸ்' கிரேடு பெற்றனர். இதே மாவட்டத்தில் கடந்தாண்டு 4934 மாணவ, மாணவிகள் 'ஏ பிளஸ்' கிரேடு பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இடுக்கி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 11,215 பேரில் 11,172 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு சதவிதம் 99.58. இது கடந்த ஆண்டை விட 0.2 சதவிகிதம் குறைவு. கடந்தாண்டு 1573 பேர் அனைத்து பாடங்களிலும் 'ஏ பிளஸ்' கிரேடு பெற்ற நிலையில் இந்தாண்டு 1272 பேராக குறைந்தது.
சாதனை படைத்த அரசு தமிழ் பள்ளிகள்:
மூணாறைச் சுற்றி எஸ்டேட் பகுதிகளில் உள்ள அரசு தமிழ் மீடியம் பள்ளிகள் 100 சதவிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தன.
சோத்துபாறை அரசு மேல் நிலை பள்ளி தொடர்ந்து 26ம் ஆண்டாக சதம் அடித்தது. அங்கு தேர்வு எழுதிய 12 பேரும் தேர்ச்சி பெற்றனர். கூடாரவிளை அரசு உயர் நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 18 பேரும், எல்லபட்டி அரசு உயர் நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 17 பேரும் தேர்ச்சி பெற்றனர். எல்லபட்டி அரசு உயர்நிலை பள்ளி தொடர்ந்து 13ம் ஆண்டாக சதம் அடித்தது.
வாகுவாரை அரசு மேல்நிலைபள்ளி தொடர்ந்து 17ம் ஆண்டாக சதம் அடித்தது. அங்கு தேர்வு எழுதிய 15 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், மாணவி காவியா அனைத்து பாடங்களிலும் ' ஏ பிளஸ்' கிரேடு பெற்றார். செண்டுவாரை அரசு மேல் நிலை பள்ளி தொடர்ந்து 18ம் ஆண்டாக நூறு சதவிகிதம் தேர்ச்சி தகுதியை தக்க வைத்துக் கொண்டது. அங்கு தேர்வு எழுதிய 11 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேவிகுளம் அரசு மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 17பேரும், மூணாறு சிறுமலர் உயர் நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 108 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
சிறுமலர் உயர் நிலை பள்ளியில் மாணவிகள் ஸ்ரீநிதி, ஸ்ருதி, ஷாதிகா, ராகினி, தேவிகா ஆகிய மாணவிகள் அனைத்து பாடங்களிலும் ' ஏ பிளஸ்' கிரேடு பெற்றனர். மூணாறு அரசு தொழில் பயிற்சி மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 159 பேரில் 154 பேர் தேர்ச்சி பெற்றனர்.