ADDED : செப் 10, 2025 02:10 AM

தேனி : தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
மறுக்கப்பட்ட 21 மாத ஊதியமற்ற நிலுவைத்தொகையை அரசு ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜ்தீன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் அன்பழகன், சந்திரன், செல்லத்துரை, ரவிக்குமார், மோகன், முத்துக்குமார், பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.