Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/தேசிய நெடுஞ்சாலை சருத்துப்பட்டி பைபாசில் ரவுண்டான அவசியம்: ஒரு ஆண்டில் விபத்தில் 26 உயிர்கள் பலியான பரிதாபம்

தேசிய நெடுஞ்சாலை சருத்துப்பட்டி பைபாசில் ரவுண்டான அவசியம்: ஒரு ஆண்டில் விபத்தில் 26 உயிர்கள் பலியான பரிதாபம்

தேசிய நெடுஞ்சாலை சருத்துப்பட்டி பைபாசில் ரவுண்டான அவசியம்: ஒரு ஆண்டில் விபத்தில் 26 உயிர்கள் பலியான பரிதாபம்

தேசிய நெடுஞ்சாலை சருத்துப்பட்டி பைபாசில் ரவுண்டான அவசியம்: ஒரு ஆண்டில் விபத்தில் 26 உயிர்கள் பலியான பரிதாபம்

UPDATED : மே 24, 2025 03:56 AMADDED : மே 23, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
பெரியகுளம்: திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஓராண்டில் 26 உயிர்களை பலி வாங்கிய சருத்துப்பட்டி, --ஜல்லிபட்டி பைபாஸ் பிரிவில், ரவுண்டானா அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி மாவட்டம் வழியாக திண்டுக்கல்-- -குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த ரோடு மாவட்டத்தின் எல்கையான பரசுராமபுரத்தில் துவங்கி கீழக்கூடலூர் வரை 30 க்கும் அதிகமான கிராமங்கள் வழியாக செல்கிறது. இதில் பல இடங்களில் கிராம சாலைகள் பைபாஸ் ரோட்டில் இணைகின்றன.

ஆபத்தான பைபாஸ் பிரிவு ரோடு: இந்த பைபாஸ் ரோடு 91 கி.மீ., தூரம் உள்ளது. தேவதானப்பட்டி முதல் தேனி துவங்கும் பகுதியான மதுராபுரி வரை 18 கி.மீ., தூரம். இதில் 2024 மே மாதம் முதல் தற்போது வரை நடந்த விபத்துக்களில் 26 உயிர்கள் பலியாகின. கடந்த வாரம் அரசு பஸ் மோதி 16 நாட்டு மாடுகள் பலியானது. அதற்கு முன் சருத்துப்பட்டி சுப்பிரமணி 55, சருத்துப்பட்டியிலிருந்து பைபாஸ் ரோட்டினை டூவீலரில் கடந்து ஜல்லிபட்டிக்கு விவசாய பணிகளுக்கு செல்லும்போது லாரி மோதி பலியானார். இதே போல் சருத்துப்பட்ட பாலமுருகன் 37. செல்வக்குமார் 35. டிச., ஜன., ஐயப்ப பக்தர்கள் 5 பேர். மே 19ல் தேனியைச் சேர்ந்த நாகேந்திரன் 48, என ஓராண்டில் வெவ்வேறு விபத்துகளில் 26 பேர் பலியாயினர்.

விபத்திற்கு என்ன காரணம்:

எண்டப்புளி பைபாஸ் ரோட்டில் வேகம் எடுக்கும் வாகனங்கள் வடுகபட்டி ரவுண்டானாவை கடந்து செல்லும் போது வேகம் கட்டுக்குள் வருகிறது. அதனை கடந்தால் மீண்டும் வேகத்தில் செல்லும் வாகனங்கள் 6 கி.மீ., தொலைவில், வலதுபுறம் சருத்துப்பட்டி கிராம சாலை, இடது புறம் ஜல்லிபட்டி கிராம சாலை இணைக்கும் பைபாஸ் ரோடு இணைகிறது. இந்த இடத்தில் பல மாதங்களாக உயர்கோபுர மின்விளக்கு, சோலார் சிக்னல்கள் பழுதாகியுள்ளது. இதனால் போதிய வெளிச்சம் இல்லை. மேலும் இந்த இரு சந்திப்பு ரோடுகள் இருப்பது பைபாஸ் ரோட்டில் வேகமாக வரும் பலரும் தெரியாத வகையில் உள்ளதால் விபத்துக்கள் நடக்கிறது.

பாக்ஸ்

ரவுண்டானா அமைக்க வேண்டும்

செந்தில்குமார் விவசாயி, சருத்துபட்டி: சருத்துப்பட்டி- ஜல்லிப்பட்டி பிரிவு பைபாஸ் ரோட்டினை கடந்து தினமும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டூவீலர் செல்கின்றனர். இந்த இடத்தில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கிறது. கடந்த ஓராண்டில் நாட்டு மாடுகள் உட்பட 26 பேர் பலியாயினர். இரு ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் ரவுண்டானா அமைக்க தொடர்ந்து வலியுறுத்துகிறோம். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரவுண்டானா, உயர்கோபுர மின் விளக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ரோட்டோரம் படிந்துள்ள மணலை அகற்ற வேண்டும்.

--





      Our Apps Available On




      Dinamalar

      Follow us