/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியாற்றின் குறுக்கே இருந்த இரும்பு நடை பாலம்- உடைந்தது -புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்பெரியாற்றின் குறுக்கே இருந்த இரும்பு நடை பாலம்- உடைந்தது -புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்
பெரியாற்றின் குறுக்கே இருந்த இரும்பு நடை பாலம்- உடைந்தது -புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்
பெரியாற்றின் குறுக்கே இருந்த இரும்பு நடை பாலம்- உடைந்தது -புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்
பெரியாற்றின் குறுக்கே இருந்த இரும்பு நடை பாலம்- உடைந்தது -புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 04, 2024 06:33 AM

கூடலுார்: கூடலுார் அருகே வெட்டுக்காடில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே இருந்த இரும்பு நடை பாலம் உடைந்து விழுந்தது.
கூடலுாரில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் உள்ளது வெட்டுக்காடு. குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியின் 12வது வார்டில் அமைந்துள்ள இப்பகுதியில்நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இவர்கள் மளிகைப்பொருட்கள், காய்கறிகள்,மருத்துவ வசதிக்காக காஞ்சிமரத்துறை வழியாக 8 கி.மீ., தூரம் உள்ள கூடலுார் வரவேண்டும்.
1973ல் வெட்டுக்காடை ஒட்டியுள்ள முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கடந்து செல்லும் வகையில்திறன் மிக்க மர பலகைகள் மூலம்நடைபாலம் அமைத்தனர். இந்நடைபாலம் வழியாக சென்றால் 2 கி.மீ., தூரத்தில் கூடலுாரை அடைந்து விடலாம். 30 ஆண்டுகளுக்கு முன் மரப்பாலம் சேதமடைந்ததால் அதை அகற்றிவிட்டு அதே இடத்தில் இரும்பாலானநடைபாலம் அமைக்கப்பட்டது.
சில ஆண்டுகளாக இரும்பு நடைபாலமும் ஆபத்தான நிலையில் இருந்தது. இதனை அகற்றி விட்டு வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் புதுப் பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். முந்தைய தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் இதனை பார்வையிட்டு பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்தார். அவர் மாறுதலாகி சென்றபின் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் கடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாவது தொடர்கிறது.
வெட்டுக்காடு மக்கள் கூறியதாவது: வெட்டுக்காடில் 500 ஏக்கருக்குமேல் நெல் விவசாயம் நடந்து வருகிறது. அறுவடை செய்யும் நெல்லை கூடலுார் கொண்டு செல்ல 8கி.மீ.,துாரம்சுற்றி செல்லவேண்டும். பாலம் அமைக்க பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தோம். நடவடிக்கை இல்லை. தற்போது நடைபாலம் உடைந்துள்ள நிலையில் உடனடியாக பாலம் அமைக்க வேண்டும்', என்றார்.