Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/தொழுநோயை கட்டுப்படுத்த வீடுதோறும் பரிசோதனையை தீவிரப்படுத்துங்க! தன்னார்வலர்களை ஆய்வில் ஈடுபடுத்த வேண்டும்

தொழுநோயை கட்டுப்படுத்த வீடுதோறும் பரிசோதனையை தீவிரப்படுத்துங்க! தன்னார்வலர்களை ஆய்வில் ஈடுபடுத்த வேண்டும்

தொழுநோயை கட்டுப்படுத்த வீடுதோறும் பரிசோதனையை தீவிரப்படுத்துங்க! தன்னார்வலர்களை ஆய்வில் ஈடுபடுத்த வேண்டும்

தொழுநோயை கட்டுப்படுத்த வீடுதோறும் பரிசோதனையை தீவிரப்படுத்துங்க! தன்னார்வலர்களை ஆய்வில் ஈடுபடுத்த வேண்டும்

ADDED : ஜூலை 26, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
கம்பம் : மாவட்டத்தில் தொழுநோயை முழுமையாக கட்டுப்படுத்த நோய் கண்டறியும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். பாதிப்பு குறைந்திருந்தாலும் சிறப்பு தன்னார்வலர்களை ஆய்வு பணியில் ஈடுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தொழு நோய் தாக்கம் கணிசமாக தெரிய துவங்கியது. மாவட்டத்தில் கொரோனா காலத்திற்கு முன் ஆண்டிற்கு 100 பேர் என இருந்த நோய் தாக்கம் கொரோனாவிற்கு பின் குறைய துவங்கியது. தற்போது தேனி மாவட்டத்தில் ஆண்டிற்கு 100 என்பது 80 ஆக பாதிப்பு குறைந்துள்ளது.

இருந்த போதும் தொழு நோய் தடுப்பு பிரிவில் பணியாளர் பற்றாக்குறை இருப்பதால், நோய் அறிகுறி கண்டறிதலில் தேக்க நிலை உள்ளது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வீடுகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கி வரும் உலக சுகாதார தன்னார்வலர்களை ( World health volunteers) தொழுநோய் கண்டறிதல் பணிக்கு பயன்படுத்த முடிவு செய்து அதற்கான பயிற்சி அவர்களுக்கு வழங்கப்பட்டது. பயிற்சியில் தொழு நோயை ஏற்படுத்தும் மைக்கோபாக்டீரிம் லெப்ரே பற்றியும், அது உடலில் பரவும் விதம், உடல் தோலில், நரம்புகளில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி விளக்கப்பட்டது.

இருந்தபோதும் அவர்களுக்கு வேறு பணிகளும் இருப்பதால், இதில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை.

எனவே,கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போன்று சிறப்பு தன்னார்வலர்களை நியமித்து, கிராமங்கள் தோறும் இதற்கான சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்.

அத்தோடு வீடுதோறும் சென்று தொழுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிந்து, சிகிச்சையை துவக்கிட வேண்டும். குறிப்பாக தொற்றும் தொழு நோய் உள்ளதா என்பதை கண்டறிவதில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.

தொழுநோயாளிகளுக்கு முகாம்கள் நடத்தி அவர்களுக்கு தேவைப்படும் உடைகள், குச்சி, செருப்பு உள்ளிட்ட பிரத்யேக பொருள்களை வழங்கிட வேண்டும். அப்போது தான் ஏற்கெனவே பாதித்துள்ளவர்களின் ஊனம் கட்டுப்படுத்தப்படும். மேலும் புதிய பாதிப்புக்கள் உள்ளதா என்பதை கண்டறியும் பணிகள் முடுக்கி விடப்பட வேண்டும்.

இல்லையென்றால் குறையும் நிலை, மீண்டும் அதிகரிக்கும் நிலைக்கு சென்று விடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us