சாரல் விடைபெற்றதால் கடும் வெப்பம்
சாரல் விடைபெற்றதால் கடும் வெப்பம்
சாரல் விடைபெற்றதால் கடும் வெப்பம்
ADDED : ஜூன் 10, 2025 02:11 AM
கம்பம்: பல நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த சாரல் மழை விடைபெற்றதால் கடும் வெப்பம் அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் ஒரு மாதமாக சாரல் மழை விடாமல் பெய்து வந்தது. வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சூரிய வெளிச்சம் இன்றி இருந்தது. அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கியதாக அறிவித்தனர். ஆனால் தொடந்து பெய்து வந்த சாரல் கடந்த ஒரு வாரத்திற்கு முன் விடைபெற்றது.
வானத்திலிருந்து மேகமூட்டம் விலகியது. சூரியன் வெப்பத்தை பாய்ச்சுகிறது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை. மாறாக அதிக வெப்பம் நிலவுகிறது. முல்லைப்பெரியாறு அணைக்கு வந்து கொண்டிருந்த நீர் 3057 கன அடியிலிருந்து 462 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து 1200 கன அடி எடுக்கப் படுகிறது. சண்முகா நதி அணைக்கு வந்து கொண்டிருந்த 9 கன அடி முற்றிலும் நின்று போனது. ஒரு வாரமாக பெய்யாத மழை மீண்டும் எப்போது துவங்கும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.