/உள்ளூர் செய்திகள்/தேனி/திறப்பு விழாவிற்கு தயாராகும் அறிவுசார் மையங்கள்திறப்பு விழாவிற்கு தயாராகும் அறிவுசார் மையங்கள்
திறப்பு விழாவிற்கு தயாராகும் அறிவுசார் மையங்கள்
திறப்பு விழாவிற்கு தயாராகும் அறிவுசார் மையங்கள்
திறப்பு விழாவிற்கு தயாராகும் அறிவுசார் மையங்கள்
ADDED : ஜன 01, 2024 06:08 AM
தேனி; மாவட்டத்தில் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தில் பழனிச்செட்டிபட்டி, தேனி பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையங்கள் திறப்பு விழாவிற்கு தயார் செய்யப்பட்டு வருகின்றன.
மாநில அரசின் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில், நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவுசார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதற்கட்டமாக தேனி அல்லிநகரம் நகராட்சி, பழனிச்செட்டிபட்டியில் தலா ரூ.2 கோடி செலவில் அறிவுசார் மையங்கள் அமைக்கும் பணி 2022ல் துவங்கியது.
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்த பூங்காவில் இம்மையம் அமைக்க 4500 சதுர அடி இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்தது. பணிகள் 2023 ஆகஸ்டில் முடிக்கப்பட்டன. இம்மையத்தில் 2500க்கும் அதிகமான புத்தகங்கள், குழந்தைகள் படிக்க தனி அறை, போட்டித் தேர்விற்கு தயாராகுபவர்களுக்கு தனி பகுதி, கணினி அறை உள்ளிட்ட வசதிகளுடன் தயாராகி உள்ளது.
பேரூராட்சி, நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அறிவுசார் மையத்தை ஜன.,2க்குள் துாய்மைப்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் ஜன., முதல் வாரத்தில் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.', என்றனர்.