/உள்ளூர் செய்திகள்/தேனி/ பருவமழையை எதிர்கொள்ள தயார் இடுக்கி கலெக்டர் தகவல் பருவமழையை எதிர்கொள்ள தயார் இடுக்கி கலெக்டர் தகவல்
பருவமழையை எதிர்கொள்ள தயார் இடுக்கி கலெக்டர் தகவல்
பருவமழையை எதிர்கொள்ள தயார் இடுக்கி கலெக்டர் தகவல்
பருவமழையை எதிர்கொள்ள தயார் இடுக்கி கலெக்டர் தகவல்
ADDED : மே 22, 2025 04:45 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக கலெக்டர் விக்னேஸ்வரி தெரிவித்தார்.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஒரு சில நாட்களில் துவங்க உள்ளதால், மழையை எதிர்கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை குறித்து கலெக்டர் விக்னேஸ்வரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தீர்மானங்கள்: நிலச்சரிவு, மண் சரிவு, வெள்ளப் பெருக்கு ஆகியவை ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை சப் கலெக்டர், டெபுடி கலெக்டர் ஆகியோர் ஒருங்கிணைப்பர். அனைத்து தாலுகாக்களில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும். பேரிடர் பாதிப்பு பகுதிகளில் கர்ப்பிணிகள், உடல், மன நிலை பாதித்தவர்கள், படுக்கை நோயாளிகள், குழந்தைகள் ஆகியோரின் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
நிவாரண முகாம்: 2018ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது செயல்பட்ட நிவாரண முகாம்கள் செயல்படுத்தப்படும். அதில் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.
அணை திறப்பு: அணை திறப்பது பகல் வேளையில் துல்லியமாக இருக்க வேண்டும். அது தொடர்பாக பொதுமக்களுக்கு முறையாக முன் அறிவிப்பு வழங்க வேண்டும். ரோட்டின் இருபுறமும் 5 மீட்டர் சுற்றளவில் மரக்கிளைகளை வெட்ட வேண்டும். மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும்போது வீடுகளுக்கு தனியாக செல்லும் மாணவ, மாணவிகளின் தகவல்களை சேகரிக்க வேண்டும்.
2200 போலீசார்: பேரிடர் மேலாண்மை பணிகளுக்கு 2200 போலீசார், 600 சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் ஆகியோர் தயார் நிலையில் உள்ளதாக போலீஸ், தீயணைப்புதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். ' மாவட்டத்தில் பேரிடர் பாதிப்பு பகுதிகள் அடையாளம் கண்டு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும்.
2018ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை கருத்தில் கொண்டு பேரிடர் நிவாரண திட்டம் தயார் செய்யப்படும். பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன', என கலெக்டர் தெரிவித்தார்.