/உள்ளூர் செய்திகள்/தேனி/ விவசாய நிலத்திற்கான அடையாள எண் அவசியம் விவசாய நிலத்திற்கான அடையாள எண் அவசியம்
விவசாய நிலத்திற்கான அடையாள எண் அவசியம்
விவசாய நிலத்திற்கான அடையாள எண் அவசியம்
விவசாய நிலத்திற்கான அடையாள எண் அவசியம்
ADDED : ஜூன் 30, 2025 04:08 AM
ஆண்டிபட்டி : ''அனைத்து விவசாயிகளும் தாங்கள் வைத்துள்ள நிலத்திற்கு அடையாள எண் அவசியம் பெற வேண்டும்.'' என, வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் கண்ணன் தெரிவித்தார்.
ஆண்டிபட்டியில் நடந்த விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆதார் எண் போன்று, விவசாய நிலங்களுக்கும் அரசின் அடையாள எண் அவசியம் வேண்டும்.
இந்த அடையாள எண் பெறுவதற்கு விவசாயிகள் தங்கள் நிலத்திற்கான கம்ப்யூட்டர் சிட்டா, அவர்களின் ஆதார் எண், அதனுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் ஆகியவற்றுடன் இ சேவை மையம் அல்லது வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பதிவு செய்ய வேண்டும்.
நிலத்திற்கான அடையாள எண் இருந்தால் மட்டுமே பாரத பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் தொடர்ந்து பலன் பெற முடியும்.
வேளாண்மை மற்றும் அது தொடர்பான துறைகளில் இந்தாண்டு முதல் விவசாயிகள் மானியம் பெறுவதற்கு நிலத்திற்கான அடையாள எண் அவசியம் இருக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நிலத்தின் பெயரில் வரும் கடன்களுக்கும் இந்த அடையாள எண் கண்டிப்பாக தேவைப்படும். விவசாயிகள் பலரும் தங்கள் நிலங்களுக்கான அடையாள எண் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும்., என தெரிவித்தார்.