/உள்ளூர் செய்திகள்/தேனி/ மனைவி, மகள் மாயம் கணவர் போலீசில் புகார் மனைவி, மகள் மாயம் கணவர் போலீசில் புகார்
மனைவி, மகள் மாயம் கணவர் போலீசில் புகார்
மனைவி, மகள் மாயம் கணவர் போலீசில் புகார்
மனைவி, மகள் மாயம் கணவர் போலீசில் புகார்
ADDED : மே 28, 2025 07:05 AM
உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகே உள்ளது அம்மாபட்டி கிராமம். இங்குள்ள மறவர் சாவடி தெருவில் வசிப்பவர் தில்லை வாசன் 35, இவரது மனைவி கீர்த்தனா தேவி 30, மகள் சிவானி 12, ஆகியோருடன் வசித்து வருகிறார்.
மே 21 ல் கணவரை பால் பாக்கெட் வாங்கி வரச் சொல்லி கடைக்கு அனுப்பியுள்ளார். பின்னர் தனது மகளுடன் மனைவியை காணவில்லை. பால் பாக்கெட் வாங்கி வந்த கணவர் வீட்டில் மனைவி, மகளையும் காணாததை அறிந்து அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் உறவினர் வீடுகளிலும், பல்லடத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாகசாந்தி விசாரிக்கின்றார்.