ADDED : செப் 04, 2025 04:43 AM
கம்பம்: கம்பம் 7 வது வார்டு சுப்ரமணியர் கோயில் தெருவில் வசிப்பவர் முத்துவீரன் 24. இவரது மனைவி லாவண்யா 21, இருவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. பிரணி ஸ்ரீ 3,என்ற மகள் உள்ளார்.
கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லாவண்யா கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கணவர் தூக்கிட்டு கொண்டதாக வந்த தகவலின் பேரில் லாவண்யா அங்கு சென்று கணவரை இறக்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். லாவண்யா புகாரின் பேரில் கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.