/உள்ளூர் செய்திகள்/தேனி/பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்புபாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு
பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு
பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு
பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு

சிமென்ட் சிலாப் அமைக்க வேண்டும்
சரவணன், சமூக ஆர்வலர் சின்னமனூர்: வாய்க்காலை சிமென்ட் சிலாப்களால் மூட வேண்டும் காந்திநகர் காலனி, சாமி குளம் பகுதி குடியிருப்புகளின் கழிவு நீர் வாய்க்காலில் விடப்படுவதால், வாய்க்கால் மாசு படுகிறது. சின்னமனூர் நகருக்குள் ஒரு. கி.மீ. தூரத்திற்கு சுரங்க பாதையில் வரும் வாய்க்கால், மேலும் ஒரு கி.மீ. தூரத்திற்கு குறிப்பாக நகருக்குள் சிமென்ட் சிலாப்புகள் அமைத்து மூடி விட்டால் இந்த பிரச்னை இருக்காது. பொதுப்பணித் துறை அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்னைக்கு தீர்வாக சாக்கடை,செப்டிக் டேங்க் கழிவுகளை வாய்க்காலுக்குள் கலக்காமல் இருக்க நகராட்சி அதற்கானவசதி செய்து தர வேண்டும்.
சாக்கடை வசதி தேவை
ஜெயராம், சமூக ஆர்வலர், சின்னமனூர்: பாசன வாய்க்கால் சாக்கடை வாய்க்காலாக மாறி விட்டது. குடியிருப்போர் என்ன செய்ய முடியும். சாக்கடை வசதி செய்து கொடுக்காததால் தான் வாய்க்காலில் விடுகின்றனர்.
தீர்வு சிமென்ட் சிலாப் அமைக்க வேண்டும்
நகராட்சி அவ்வப்போது வாய்க்காலை தூர் வாரி சுத்தம் செய்கிறது. அது பிரச்னைக்கு தீர்வாகாது. சாக்கடை கழிவுகளை கலக்காமல் இருக்க கரையின் இருபுறமும் கழிவுநீர் வடிகால் வசதி அமைத்திட வேண்டும்.


