ADDED : செப் 09, 2025 04:46 AM
தேனி: தேக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சுகாதாரம், பெண்கள் தொழிற்கல்வி முக்கியத்துவம் பற்றி மாவட்ட திறன் பயிற்சி உதவி பயிற்சி அலுவலர் சண்முகவதி பேசினார். மாவட்ட மகளிர் அதிகார மைய அலுவலர்கள் பிரபாகரன், ரவிசங்கர் ஊட்டசத்து அவசியம் பற்றி பேசினர். ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.