/உள்ளூர் செய்திகள்/தேனி/ கஞ்சா வழக்கில் கைதான நால்வர் மீது குண்டாஸ் கஞ்சா வழக்கில் கைதான நால்வர் மீது குண்டாஸ்
கஞ்சா வழக்கில் கைதான நால்வர் மீது குண்டாஸ்
கஞ்சா வழக்கில் கைதான நால்வர் மீது குண்டாஸ்
கஞ்சா வழக்கில் கைதான நால்வர் மீது குண்டாஸ்
ADDED : செப் 15, 2025 06:09 AM
தேனி : கஞ்சா வழக்குகளில் கைதான நால்வரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் கடந்த மாதம் கஞ்சா விற்பனை செய்தவர்கள், பயன்படுத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தவர்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதில் கடமலைக்குண்டு போலீசாரால் ஆக.19ல் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் 51, கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பெரியகுளம் நேருநகர் அழகரை 39, ஆக.13ல் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 750 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
தேனி காமராஜர் லைன் அர்ஜூனன் 52. இவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ 400 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். அவரை ஆக.21ல் கைது செய்தனர்.
கம்பம் வடக்கு போலீசார் 3 கிலோ 500 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த உசிலம்பட்டி நடுசெம்பட்டி அரவிந்த்தை 29, ஆக.12ல் கைது செய்தனர். கஞ்சா வழக்குகளில் கைதான நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சினேஹா பிரியா, கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிற்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். மாவட்ட சிறையில் இருந்த நால்வரும், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.