/உள்ளூர் செய்திகள்/தேனி/ குளத்தை குப்பை கிடங்காக மாற்றுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு குளத்தை குப்பை கிடங்காக மாற்றுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு
குளத்தை குப்பை கிடங்காக மாற்றுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு
குளத்தை குப்பை கிடங்காக மாற்றுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு
குளத்தை குப்பை கிடங்காக மாற்றுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு

கூட்டுக்குடிநீர் கிடைக்கவில்லை
அய்யணன், சண்முகசுந்தரபுரம்: கிராமத்திற்கு குன்னூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் உள்ளது. ஆனால் தினமும் குடிநீர் கிடைப்பதில்லை. போர்வெல் நீரே அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தேவைப்படுவோர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஜல்ஜீவன் திட்டத்தில் தனி பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.
புகையிலை பயன்பாடு அதிகம்
மீனாட்சிசுந்தரம், சண்முகசுந்தரபுரம்: கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பயன்பாடு அதிகம் உள்ளது. இதனை தடுக்கும் நடவடிக்கை இல்லை. ஊராட்சியில் துப்புரவு பணியாளர் பற்றாக்குறையை காரணம் கூறி சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. குடியிருப்புகளில் கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர், குப்பை ஆங்காங்கே தேங்கியுள்ளது. மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லை.
குளத்தை பாதுகாக்க வேண்டும்
ராம்தாஸ், சண்முகசுந்தரபுரம்: கிராமத்தில் தெருவிளக்குகள் போதுமான அளவில் இல்லை. கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். பழுதானவற்றை உடனுக்குடன் மாற்ற வேண்டும். அரசு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள சிறுகுளத்தில் மழைக்காலத்தில் கிடைக்கும் நீர் சில மாதங்கள் தேங்குவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் சமன் செய்யப்படும்.