ADDED : செப் 14, 2025 03:58 AM
மூணாறு:மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான நயமக்காடு எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனைச் சேர்ந்தவர் தோட்ட தொழிலாளி முனியசாமி 53. இவர், வீட்டில் இறந்த நிலையில் கிடந்ததை நேற்று காலை குடும்பத்தினர் பார்த்தனர்.
அவரது வாய், மூக்கு, காது ஆகியவற்றில் ரத்த கசிவு ஏற்பட்டிருந்தது. மூணாறு போலீசார் விசாரித்தனர்.
கடந்த வாரம் முனியசாமி தமிழகம் சென்றபோது விபத்தில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு முனியசாமி இறந்த காரணம் குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.