/உள்ளூர் செய்திகள்/தேனி/வைகை அணையில் குவியும் குப்பையால் சுகாதாரம் பாதிப்புவைகை அணையில் குவியும் குப்பையால் சுகாதாரம் பாதிப்பு
வைகை அணையில் குவியும் குப்பையால் சுகாதாரம் பாதிப்பு
வைகை அணையில் குவியும் குப்பையால் சுகாதாரம் பாதிப்பு
வைகை அணையில் குவியும் குப்பையால் சுகாதாரம் பாதிப்பு
ADDED : ஜன 13, 2024 03:54 AM

ஆண்டிபட்டி : வைகை அணை பூங்காக்களில் செயல்படும் கடைகளில் சேரும் குப்பையை அணை முன்புறம் ஆற்றை ஒட்டிய கரைப்பகுதியில் கொட்டிச்செல்கின்றனர். குவியும் குப்பை அள்ளப்படாததால் சுகாதாரப் பாதிப்பு ஏற்படுகிறது.
வைகை அணை வலது, இடது கரை பூங்காக்களில் 30க்கும் மேற்பட்ட கடைகள் நீர்ப்பாசன துறை அனுமதி பெற்று செயல்படுகின்றன. கடைகளில் விற்கப்படும் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள், பழங்கள், தின்பண்டங்கள் இவற்றை பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படும் குப்பையை கொட்டுவதற்கான கிடங்கு வசதி இல்லை. ஆங்காங்கே சேரும் குப்பையை அணையின் முன்புறம் வைகை ஆற்றின் இருபுறமும் கரைகளில் கொட்டுகின்றனர். மக்கும், மக்காத குப்பை ஒன்றாக கலந்து பல இடங்களில் சுகாதார பாதிப்பு ஏற்படுத்துகிறது. குப்பை கொட்டுபவர்கள், வைகை அணை பூங்காவின் சுகாதாரம் குறித்து அக்கறை கொள்வதில்லை. நீர்ப்பாசன துறை, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கையும் இல்லை. வைகை ஆற்றின் இரு கரைப்பகுதியையும் தூய்மை பகுதியாக பராமரிக்க சுற்றுலாத்துறை, நீர்ப்பாசன துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.