/உள்ளூர் செய்திகள்/தேனி/ நகராட்சி முன் குப்பை கொட்டி காங்., ஆர்ப்பாட்டம் நகராட்சி முன் குப்பை கொட்டி காங்., ஆர்ப்பாட்டம்
நகராட்சி முன் குப்பை கொட்டி காங்., ஆர்ப்பாட்டம்
நகராட்சி முன் குப்பை கொட்டி காங்., ஆர்ப்பாட்டம்
நகராட்சி முன் குப்பை கொட்டி காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 21, 2025 05:48 AM

தேனி : தேனி நகராட்சி அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சி சார்பில் நகராட்சி வரி வசூல் குளறுபடிகளை களையவும், வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தராத கமிஷனரை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரத்தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, நிர்வாகிகள் சுதாகர், முருகன்,ராமசந்திரன், சங்கர், சின்னமபாண்டி, இனியவன், சதாசிம், கவுன்சிலர் நாகராஜ், சம்சுதீன், அபுதாஹீர், முகமது மீரான், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் நடந்த போது நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் குப்பையை கொட்டி சென்றனர்.