/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாடுகள் இறந்த விரக்தியில் பெண் விவசாயி தற்கொலை மாடுகள் இறந்த விரக்தியில் பெண் விவசாயி தற்கொலை
மாடுகள் இறந்த விரக்தியில் பெண் விவசாயி தற்கொலை
மாடுகள் இறந்த விரக்தியில் பெண் விவசாயி தற்கொலை
மாடுகள் இறந்த விரக்தியில் பெண் விவசாயி தற்கொலை
ADDED : செப் 09, 2025 04:48 AM
கடமலைக்குண்டு: கோம்பைத்தொழுவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி பஞ்சம்மாள் 55, தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் பெற்று 4 கறவை மாடுகள் வாங்கி வளர்த்து வந்தார்.
அந்த மாடுகள் ஒவ்வொன்றாக இறந்துவிட்டன. இதனால் கடனை அடைக்க முடியாமல் அதே ஊரில் இரவு பஞ்சு தோப்புகளை குத்தகைக்கு எடுத்து பஞ்சு எடுத்து வந்துள்ளார்.
இலவம் பஞ்சுக்கும் விலை கிடைக்காமல் போனதால் தான் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். கடன் பட்டு வாழ்வதைவிட இறந்து விடலாம் என்று அடிக்கடி கூறிவந்துள்ளார்.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்ற பஞ்சம்மாள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.
ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பஞ்சமாளின் கணவர் கிருஷ்ணன் புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.