ADDED : செப் 24, 2025 06:37 AM
போடி : சின்னமனுார் அருகே மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் பிரவீனா 29. இவர் திருமணம் ஆகி முதல் கணவரை விட்டு பிரிந்து, போடி அருகே முந்தல் காலனியில் வசிக்கும் மாசுக்காளை 37. என்ற கூலித் தொழிலாளியை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். கணவர், குழந்தைகளுடன் முந்தலில் வசித்து வந்த நிலையில் நேற்று போடி பங்காருசாமி கண்மாய் அருகே கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
வி.ஏ.ஓ., விஜயலட்சுமி புகாரில், போடி தாலுகா போலீசார் இறந்த பிரவீனாவின் சடலத்தை மீட்டு போடி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.