/உள்ளூர் செய்திகள்/தேனி/ மகள் இறப்பில் சந்தேகம் தந்தை போலீசில் புகார் மகள் இறப்பில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்
மகள் இறப்பில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்
மகள் இறப்பில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்
மகள் இறப்பில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்
ADDED : மே 11, 2025 05:11 AM
ஆண்டிபட்டி : சக்கம்பட்டி ஜெ.ஜெ.,நகரை சேர்ந்தவர் கணேசா 55, தனது கணவர் சேட்டு என்பவருடன் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர்களது இளைய மகள் தமிழ்செல்வியை அதே ஊரைச் சேர்ந்த அய்யனார் மகன் முனீஸ்வரன் என்பவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தார்.
திருமணம் முடிந்த சில மாதங்களில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழ்ச்செல்வி அவரது வீட்டில் தூக்கிட்டதால் கணவர் முனீஸ்வரன் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்துள்ளார்.
மருத்துவமனையில் தமிழ்ச்செல்வி சிகிச்சை பலனின்றி இறந்தார். தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் கணேசா ஆண்டிபட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.