/உள்ளூர் செய்திகள்/தேனி/ மகன் காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை பலி மகன் காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை பலி
மகன் காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை பலி
மகன் காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை பலி
மகன் காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை பலி
ADDED : மார் 19, 2025 04:53 AM
தேவதானப்பட்டி : மகன் காதணி விழாவிற்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை விஜயராகவன் டூவீலரிலிருந்து விழுந்து பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கோட்டைப்பட்டி சாவடி தெருவைச் சேர்ந்தவர் விஜயராகவன் 41.
இவரது மனைவி ராஜபுஷ்பம் 37. மூன்று மகன்கள் உள்ளனர். 2 வது மகன் காதணி விழாவிற்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க ஜெயமங்கலம் நோக்கி டூவீலரில் சென்றார்.
ஜெயமங்கலம் ஆண்டிபட்டி ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே நிலைதடுமாறி மார்ச் 9 இரவில் விழுந்தார்.
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இவர் நேற்று முன்தினம் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.-