ADDED : மே 28, 2025 07:13 AM
போடி : ராசிங்காபுரம் தெற்குப்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ் 55. இவரது மகன் விஜயன் 26.
இவர் கோவையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீரபாண்டி கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊரான ராசிங்காபுரம் வந்துள்ளார். திரும்ப கோவை செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன் பின் விஜயனின் அலைபேசிக்கு முத்துராஜ் தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச் ஆப்' என பதில் வந்துள்ளது. முத்துராஜ் புகாரில் போடி தாலுாகா போலீசார் விஜயனை தேடி வருகின்றனர்.