/உள்ளூர் செய்திகள்/தேனி/ மகனுக்கு 'மிஸ்டுகால்' கொடுத்து தந்தை தற்கொலை மகனுக்கு 'மிஸ்டுகால்' கொடுத்து தந்தை தற்கொலை
மகனுக்கு 'மிஸ்டுகால்' கொடுத்து தந்தை தற்கொலை
மகனுக்கு 'மிஸ்டுகால்' கொடுத்து தந்தை தற்கொலை
மகனுக்கு 'மிஸ்டுகால்' கொடுத்து தந்தை தற்கொலை
ADDED : செப் 04, 2025 04:46 AM
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை அரசமரத்து சந்தைச் சேர்ந்தவர் போஸ் 77. இவருக்கு மகன்கள், மகள்கள் என 5 பிள்ளைகள். திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். சில மாதங்களாக கிட்னி பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். இவரது மகன் லட்சுமணனுக்கு அலைபேசியில் 'மிஸ்டுகால்' கொடுத்தார். லட்சுமணன் தந்தையின் அலைபேசியில் பேசுவதற்கு முயன்றார்.
போஸ் அலைபேசியை எடுக்கவில்லை. வீட்டிற்கு சென்று பார்த்தபோது போஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சட்டைப்பையில் அவர் எழுதிய கடிதத்தில், 'உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை விட இறந்து போகிறேன்,' என எழுதி வைத்திருந்தார். வடகரை எஸ்.ஐ., விக்னேஷ் விசாரணை செய்து வருகிறார்.