/உள்ளூர் செய்திகள்/தேனி/ 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல் அக்டோபர் முதல் வாரத்தில் திறக்க டி.ஆர்.ஓ.,உறுதி 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல் அக்டோபர் முதல் வாரத்தில் திறக்க டி.ஆர்.ஓ.,உறுதி
18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல் அக்டோபர் முதல் வாரத்தில் திறக்க டி.ஆர்.ஓ.,உறுதி
18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல் அக்டோபர் முதல் வாரத்தில் திறக்க டி.ஆர்.ஓ.,உறுதி
18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல் அக்டோபர் முதல் வாரத்தில் திறக்க டி.ஆர்.ஓ.,உறுதி
ADDED : செப் 20, 2025 04:42 AM

தேனி: 'பருவமழை துவங்கியும் 18 ம்கால்வாயில் தண்ணீர் திறக்கவில்லை. தண்ணீர் திறந்து விடுவதற்கு முன் நீர் வரத்து கால்வாய்களை துார் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த டி.ஆர்.ஓ., மகாலட்சுமி அக்டோபர் முதல்வாரம் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தார்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, வேளாண் இணை இயக்குனர் சாந்தாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) வளர்மதி, கூட்டுறவு இணைப்பதிவாளர்நர்மதா, கால்நடை இணை இயக்குனர் கோயில்ராஜா, தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
சீனிராஜ், மாவட்டத் தலைவர், தமிழக தேசிய விவசாயிகள் சங்கம்: ஆவின் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர்பாலுக்கு ரூ.35 விலையுடன் ஊக்கத்தொகை ரூ.3யையும் நேரடியாக வழங்க வேண்டும். வைகை அணை நீர்ப்பிடிப்பு ஒ ரங்களில் கால்நடை தீவன புற்களை வளர்த்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்தால் உதவியாக இருக்கும். தீவனப்பற்றாக்குறையும் தீரும்.
டி.ஆர்.ஓ.,: சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்து இதுகுறித்து முடிவு செய்யப்படும்.
தடுப்பணை கட்ட வேண்டும் சுதாகர், மூலகடை: முத்தனம்பட்டி, கருப்பாயிபுரம், பின்னத்தேவன்பட்டி,மூலக்கடை, ஆளந்தளிர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் யானைக்கெஜம் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும்.இதனால் இப்பகுதி விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
கலெக்டர்: யானைகெஜத்தில்தடுப்பணை கட்ட ஆய்வு செய்யப்படும்.
ஜெயபால், தமிழக வாழ்வுரிமை கட்சி, தேவாரம்: வழக்கமாக ஆண்டுதோறும் 18ம் கால்வாயில் விவசாய பயன்பாட்டிற்கு செப்.18 ல் தண்ணீர் திறக்கப்படும். இந்தாண்டு பருவமழை துவங்கிய பின்பும் திறக்கவில்லை. தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதற்கு முன்பாக நீர்வழிப்பாதையை துார்வார வேண்டும்.
டி.ஆர்.ஓ.,: அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். பிச்சை, பெரியகுளம் : எண்டப்புளி புதுக்கோட்டை, கீழவடகரை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதுக்குளம், கைக்கிளான் குளம் பொதுப்பணித்துறை சார்பில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இணைந்து துார்வாரும் பணிகளை மேற்கொண்டோம். அதற்கானஉதவித்தொகை வழங்காமல் உள்ளது. தற்போது அந்த குளங்களில் முறையான ஏலம் விடாமல் மீன்பிடி குத்தகை தனிநபர் ஆக்கிரமித்துள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பி.டி.ஆர்., கால்வாயில் நீர் திறக்க வேண்டும் தண்டபாணி, விவசாய சங்கம், தேனி: பூமலைக்குண்டு, தர்மாபுரி முதல் கொடுவிலார்பட்டி வரை தண்ணீரின்றி வறண்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் பயனடைய பி.டி.ஆர்., தந்தைப் பெரியார் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும்.
ரவிநாராயணன், பெரியகுளம்: தென்னை, மா சாகுபடியில் ஊடுபயிர்களாக பாக்கு, கோகோ, அவக்கோடா, பாக்கு, ஜாதிக்காய் பயிரிட ஊக்குவிக்க வேண்டும். இதற்கு உறுதுணையாக தேக்கு, மகாகனி மரக்கன்றுகளை குறைந்த விலைக்கோ, அல்லது உற்பத்தி விலைக்கே விவசாயிகளுக்குவழங்க வேண்டும்.
நிர்மலா, துணை இயக்குனர்: வனவிரிவாக்கப் பிரிவில் இருந்து மகாகனி, இதர மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.