/உள்ளூர் செய்திகள்/தேனி/ வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக நீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக நீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக நீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக நீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக நீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மே 11, 2025 05:17 AM
ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து மே 8 ல் வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று முன்தினம் வினாடிக்கு 750 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையில் இருந்து வெளியேறும் நீர் குருவியம்மாள்புரம், டி.புதூர், வேகவதி ஆசிரமம், வெள்ளையத்தேவன்பட்டி, அணைக்கரைப்பட்டி மூனாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, குண்டலப்பட்டி, புள்ளிமான்கோம்பை உட்பட பல கிராமங்களை கடந்து செல்கிறது. தற்போது கோடை காலம் என்பதால் கடந்த சில மாதங்களாக கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்தது. சில மாதங்கள் கோடையின் தாக்கத்தை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் விவசாயிகள் இருந்தனர்.
இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவிற்காக மே 8 முதல் 12 வரை வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக நீர் செல்கிறது. ஆற்றில் செல்லும் நீரால் ஆங்காங்குள்ள பள்ளங்களிலும் நீர் தேங்கி உள்ளது. விவசாய பயன்பாட்டிற்கும், கால்நடைகளின் தண்ணீர் தேவைக்கும் ஆற்றில் செல்லும் நீர் பயன்படுவதால் கரையோர விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.