/உள்ளூர் செய்திகள்/தேனி/ புதர் மண்டிய குச்சனுார் வாய்க்கால் துார்வாரும் பணியில் விவசாயிகள் புதர் மண்டிய குச்சனுார் வாய்க்கால் துார்வாரும் பணியில் விவசாயிகள்
புதர் மண்டிய குச்சனுார் வாய்க்கால் துார்வாரும் பணியில் விவசாயிகள்
புதர் மண்டிய குச்சனுார் வாய்க்கால் துார்வாரும் பணியில் விவசாயிகள்
புதர் மண்டிய குச்சனுார் வாய்க்கால் துார்வாரும் பணியில் விவசாயிகள்
ADDED : ஜூன் 11, 2025 07:34 AM

சின்னமனூர் : செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி தண்ணீர் செல்ல முடியாத நிலையில் இருந்த குச்சனூர் வாய்க்காலை தூர் வாரும் பணிகளில் விவசாயிகள்,கிராம கமிட்டியினர் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு பாசனத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் நன்செய் நிலத்தில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த பாசனத்திற்கான கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, குச்சனூர், சீலையம்பட்டி, கோட்டூர், வீரபாண்டி, பழநி செய்யபட்டி வரை 17 வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த வாய்க்கால்களில் நூற்றுக்கணக்கான மடைகள் உள்ளன. வாய்க்கால்களை விவசாயிகள் துார் வாருகின்றனர். சின்னமனூர் சின்ன வாய்க்கால், பெரிய வாய்க்கால் தூர்வாரி முடித்துள்ளனர்.
இந்நிலையில் மார்க்கையன்கோட்டையிலிருந்து குச்சனூர் வரை உள்ள 3 கி.மீ. நீளமுள்ள குச்சனூர் வாய்க்காலை தூர் வாரும் பணிகளில் குச்சனூர் விவசாயிகள், கிராம கமிட்டியினர் ஈடுபட்டுள்ளனர். பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் இந்த பணிகள் நடைபெறுகிறது.
அடர் கூறுகையில், 'வாய்க்கால் தூர் வாரும் பணிகளை விவசாயிகளின் பங்களிப்புடன் செய்து வருகிறோம். வாய்க்காலை ஒட்டி கிழக்கு கரையை அகலப்படுத்தி கோயிலிற்கு வரும் பக்தர்கள் எளிதாக நடந்த செல்ல வசதி செய்ய பேரூராட்சி சார்பில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாய்க்காலுக்கு மேல் பக்கம் தடுப்பு சுவர் கட்டும் பணிகளும் நடைபெறுகிறது. முதல் போக நடவு பணிகள் துவங்கும் முன் தூர் வாரும் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்,' என்றார்.