ADDED : மே 16, 2025 04:08 AM
கம்பம்: கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த விவசாயி முருகன் 43. இவருடைய மனைவி நதியா 39, இவர்களுக்கு தேவிகா, பூமிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மே 13 ல் தனது இளைய மகள் பூமிகாவை திருமங்கலத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட நதியா அழைத்து சென்றுள்ளார். மகளை சேர்த்து விட்டு வீடு திரும்பிய போது வீட்டிற்குள் முருகன் தூக்கில் தொங்கி கொண்டிருந்துள்ளார். அதிர்ச்சியடைந்த நதியா சத்தம் போடவும், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து , முருகனை தூக்கில் இறக்கி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகன் தற்கொலை செய்து கொண்டதாக ராயப்பன் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.