Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

ADDED : ஜூன் 27, 2025 05:22 AM


Google News
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கீ.காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா 55, தனது மகன் விஜயன் தோட்டத்தில் வீடு கட்டி அங்கேயே மனைவியுடன் தங்கி உள்ளார்.

இரு நாட்களுக்கு முன் ராஜா தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் திரும்ப வரவில்லை. அவரைத் தேடிச் சென்றபோது தண்ணீர் குட்டை அருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து அவரது மனைவி சத்தம் போட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்துள்ளனர். முதுகில் மின்சாரம் தாக்கிய காயங்கள் இருந்துள்ளது. அவ்விடத்தில் சுற்றி பார்த்த போது தண்ணீர் குட்டையில் மின் ஒயர் அருந்து விழுந்து மின்சாரம் பரவி இருப்பது தெரிய வந்தது. மயங்கி கிடந்த ராஜாவை அங்கிருந்தவர்கள் ஆட்டோவில் ஏற்றி எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us