/உள்ளூர் செய்திகள்/தேனி/ 30 ஆண்டுகள் பராமரிப்பில் பறவைகள் வலசை வரும் வீட்டுத்தோட்டம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் குடும்பத்தினர் 30 ஆண்டுகள் பராமரிப்பில் பறவைகள் வலசை வரும் வீட்டுத்தோட்டம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் குடும்பத்தினர்
30 ஆண்டுகள் பராமரிப்பில் பறவைகள் வலசை வரும் வீட்டுத்தோட்டம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் குடும்பத்தினர்
30 ஆண்டுகள் பராமரிப்பில் பறவைகள் வலசை வரும் வீட்டுத்தோட்டம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் குடும்பத்தினர்
30 ஆண்டுகள் பராமரிப்பில் பறவைகள் வலசை வரும் வீட்டுத்தோட்டம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் குடும்பத்தினர்

மன நிறைவு
பி.முருகேசன், தொழில் முனைவர், போடி: இயற்கை மீது ஆர்வம் உள்ளதால் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் செம்பருத்தி, ஹைபிஸ்கட், இப்டர் பியோ, குரோட்டன், செண்பகம், மனோரஞ்சிதம், அரளி, அடுக்கு மல்லி, அடுக்கு செம்பருத்தி, பிரம்ம கமலம், துளசி செடிகள், பாட்டில் பிரஸ், பொன் கொன்றை, சரக்கொன்றை, மஞ்சள் அரளி பூக்களும், சப்போட்டா, சீதாப்பழம், சந்தனம், தென்னை, முருங்கை உள்ளிட்ட மரங்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்தினருடன் இணைந்து வளர்த்து வருகின்றேன். தினமும் காலை, மாலை நேரங்களில் செடிகளை பராமரித்து வருவதால் கிடைக்கும் சுத்தமான ஆக்சிஜனால் உடல் ஆரோக்கியமாக உள்ளது. பூத்துக் குலுங்கும் பூக்களில் உள்ள தேனை குடிப்பதற்காக குயில், 'ஸ்டிச்சிங் பேர்ட்', 'கம்மிங் பேர்டு' உள்ளிட்ட பறவைகள் வருவதோடு, தண்ணீர் பாய்ச்சும் போது குளித்து மகிழ்கின்றன. பெண்கள் கிடைக்கும் ஓய்வு நேரங்களை பயன்படுத்தி வீட்டின் முன்பாக உள்ள காலியிடம், மாடியில் சிறிய அளவில் தோட்டம் அமைக்கலாம்., என்றார்.
இயற்கை உர பயன்பாடு
பி.எம்.பாலாஜி, ஐ.டி., துறை, போடி: வீட்டில் பூக்கள், மூலிகை, பழங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட செடிகள், மரங்கள் வளர்த்து இயற்கை முறையில் பராமரித்து வருகின்றோம். மரங்களில் இருந்து உதிரும் இலைகள், வீட்டில் பயன் படுத்தும் காய்கறி கழிவுகள், ஆட்டு சாணத்தை ஒரே இடத்தில் போட்டு மக்க வைத்து இயற்கை உரமாக பயன்படுத்தி வருகிறோம்.