/உள்ளூர் செய்திகள்/தேனி/ இணைப்பு வழங்கி இரண்டாண்டு முடிந்தும் குடிநீர் வினியோகம் இல்லை டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி பொது மக்கள் குமுறல் இணைப்பு வழங்கி இரண்டாண்டு முடிந்தும் குடிநீர் வினியோகம் இல்லை டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி பொது மக்கள் குமுறல்
இணைப்பு வழங்கி இரண்டாண்டு முடிந்தும் குடிநீர் வினியோகம் இல்லை டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி பொது மக்கள் குமுறல்
இணைப்பு வழங்கி இரண்டாண்டு முடிந்தும் குடிநீர் வினியோகம் இல்லை டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி பொது மக்கள் குமுறல்
இணைப்பு வழங்கி இரண்டாண்டு முடிந்தும் குடிநீர் வினியோகம் இல்லை டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி பொது மக்கள் குமுறல்
ADDED : ஜூன் 03, 2025 12:49 AM

ஆண்டிபட்டி: ''கலங்கலான குடிநீர் வினியோகம்; அதனால் ஏற்படும் சுகாதாரக்கேடு. குண்டும் குழியுமான ரோடுகளால் விபத்து அபாயம். பயன்படுத்த முடியாத நிலையில் பொது கழிப்பறை, இணைப்பு கொடுத்து 2 ஆண்டுகள் கடந்த பின்பும் 'ஜல்ஜீவன்' திட்டக் குழாயில் வினியோகிக்கப்படாத குடிநீர்.'' என, பல்வேறு அடிப்படை வசதி குறைபாடுகளால் ஆண்டிபட்டி ஒன்றியம் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் பொது மக்கள் சிரமப்படுகின்றனர்.
இவ்வூராட்சியில் டி.ராஜகோபாலன்பட்டி, சில்க்குவார்பட்டி, சேடப்பட்டி, பெத்துநாயக்கன்பட்டி, புதுார், அய்யர் கோட்டம், முத்துக்கிருஷ்ணாபுரம், டி.வி.ரங்கநாதபுரம், சக்கம்பட்டி சத்யா நகர், ஜெ.ஜெ.நகர், சீதாராம்தாஸ் நகர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த ஊராட்சிக்கு சேடப்பட்டி ஆண்டிபட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் ஆகிறது. பல கிராமங்களில் போதுமான அளவு கழிவுநீர் வடிகால், ரோடு வசதி இல்லை. துப்புரவு, துாய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
டி.வி.ரங்கநாதபுரம், சத்யா நகர் பொது மக்கள் கூறியதாவது:
முடங்கிய குடிநீர் வினியோகம்
அழகர்சாமி, டி.வி.ரெங்கநாதபுரம்: எங்கள் கிராமத்தில் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் தெருக் குழாய்களில் மட்டுமே குடிநீர் வினியோகம் ஆகிறது. அதுவும் பற்றாக்குறைாக உள்ளது.
'ஜல் ஜீவன்' திட்டத்தில் வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுத்து, இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதுவரை ஒரு சொட்டு நீர் கூட, அதில், 'சப்ளை' இல்லை. வெறும் காற்றுத்தான் வருகிறது. இத்திட்டத்தில் குழாய் பதிப்புக்கு தோண்டப்பட்ட தெருக்களும் சரி செய்யப்படவில்லை.
ஆண்களுக்கு பொதுக் கழிப்பறை வசதி இல்லை. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பெண்கள் பொது கழிப்பறை பள்ளமான இடத்தில் இருப்பதால் மழைக் காலத்தில் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்டுகிறது.
புதிய கழிப்பறை கட்ட நடவடிக்கை வேண்டும். ரேஷன் கடை மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டும் செயல்படுவதால் விவசாய வேலைக்கு சென்றவர்கள் பொருட்கள் வாங்குவதில் தொடர் சிரமங்களை சந்திக்கின்றனர். கிராமப் பகுதிகளில் தேவையான இடங்களில் 'சிமென்ட் ரோடு', 'பேவர் பிளாக்' வசதி செய்து தரப்படவில்லை. கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்வதும் இல்லை.
குவியும் குப்பையும் அள்ளப்படாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சுடுகாடு, இடுகாடு ஆகியவை தனித்தனியாக உள்ளன.
இப்பகுதிக்கு செல்ல ரோடு வசதி, தண்ணீர், தெரு விளக்கு வசதி இல்லை. இந்த அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ஊராட்சிக்கு, கலெக்டர் உத்தரவிட வேண்டும்., என்றார்.
ரோட்டில் தேங்கும் கழிவுநீர்
கண்ணாயிரம், சக்கம்பட்டி சத்யாநகர்: இப்பகுதியில் 1000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். தனியார் பள்ளிகள், பத்திரப்பதிவு அலுவலகம், சர்வேயர் அலுவலகம் இருப்பதால் தினமும் நுாற்றுக்கணக் கானவர்கள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
மேல்நிலைத் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கலங்கலாக வருகிறது. வைகை ரோடு ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே நான்கு ரோடுகள் சந்திக்கும் இடம் உள்ளது.
இப்பகுதியில் வடிகால் பாதிப்படைந்து, கழிவு நீர் ரோட்டில் தேங்குகிறது. நடந்து செல்பவர்கள் வாகனங்களில் செல்பவர்கள் கழிவு நீரில் இறங்கி செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: ஊராட்சி எல்லை அதிகம் உள்ளது. தொலை துாரப் பகுதிக்கு துப்புரவு பணியாளர்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் சில நேரம் பணி பாதிப்படைகிறது.
வைகை ரோட்டில் கழிவுநீர் செல்லும் குழாயை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற வேண்டும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும்.
குடிநீர் சுகாதாரப் பணிகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தில் முக்கியத்துவம் தரப்படுகிறது. என, தெரிவித்தனர்.