சேறும் சகதியுமாக மாறிய இ.பி., காலனி
சேறும் சகதியுமாக மாறிய இ.பி., காலனி
சேறும் சகதியுமாக மாறிய இ.பி., காலனி
ADDED : ஜூன் 01, 2025 12:24 AM

உத்தமபாளையம்: உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நகரின் மேற்கு பகுதியில் கல்லூரிக்கு எதிரில் இ.பி. காலனி உள்ளது.
இங்கு 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. இந்த காலனியில் சாக்கடை கட்டுவதற்காக தோண்டிய பேரூராட்சி நிர்வாகம், அப்படியே விட்டு சென்றது.
இதனால் மண் தரையாக இருந்த தெருக்கள் தற்போது பெய்து வரும் மழையால் சேறும் சகதியுமாக மாறியதால் காலனி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தெருவில் செல்லும் முதியோர், குழந்தைகள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் இ.பி.,காலனி தெருவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.