/உள்ளூர் செய்திகள்/தேனி/தேனியில் ஆக்கிரமிப்புகளால் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்தேனியில் ஆக்கிரமிப்புகளால் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்
தேனியில் ஆக்கிரமிப்புகளால் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்
தேனியில் ஆக்கிரமிப்புகளால் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்
தேனியில் ஆக்கிரமிப்புகளால் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்

பார்க்கிங் பகுதியிலும் இடையூறு
பெத்தாட்சி ஆசாத், மாவட்ட செயலாளர் ஐக்கிய கம்யூ., தேனி: தேனி நகர்பகுதியில் ஆக்கிரமிப்புகளால் விபத்துகள் அதிகரிக்கிறது. முன்பு போக்குவரத்தை முறைப்படுத்த நகர்பகுதியில் 30 போலீசார் இருந்தனர். ஆனால் தற்போது 10க்கும் குறைவாக உள்ளனர். மதுரை ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு அதிகம். பார்கிங் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சில கடைகாரர்கள் கம்பி, ஸ்டாண்டு வைத்து மறைப்பதால் வாகனங்களை ரோட்டில் நிறுத்தும் நிலை உள்ளது. பள்ளி நேரங்களில் நகர்பகுதிக்குள் வரும் வாகனங்களால் மாணவர்கள், பணிக்கு செல்வோர் அவதியடைகின்றனர்.
பிளக்ஸ் பேனர் வைப்பதை முறைப்படுத்துங்கள்
திருப்பதி, வடக்கு மாவட்ட செயலாளர், பா.ம.க.,தேனி: தேனி மெயின் ரோடுகள் மட்டுமின்றி தெருக்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் நகரில் மேலும் போக்குவரத்து இடையூறு அதிகரிக்கும். ரோடு, தெரு சந்திப்புகளில் வைக்கும் பிளக்ஸ், பேனர்களால் ரோட்டில் வரும் வாகனங்களை அறிய முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். உரிய அனுமதியோடு பேனர்கள் வைக்கவும், உரிய நாளில் உடனே அகற்ற வேண்டும்.
தீர்வு பாராபட்சம் இன்றி நடவடிக்கை தேவை
மாவட்ட தலைநகரில் தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இவைகளை முறைப்படுத்த பாராபட்சம் இன்றி மெயின் ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றிட வேண்டும். பள்ளி, கல்லுாரி நேரங்களில் முக்கிய பகுதிகளில் ஒரு வழிப்பாதை நடைமுறைப்படுத்த வேண்டும். பஜார் வீதிகளில் சிறுவியாபாரிகள் கடை நடத்துவதை முறைப்படுத்த வேண்டும். டிராபிக் போலீஸ் எண்ணிக்கை அதிகரித்து முக்கிய இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.


