ADDED : ஜூன் 11, 2025 07:32 AM
தேனி :தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். திறன் மேம்பாட்டு உதவி இயக்குநர் பாஸ்கரன், பயிற்சி அலுவலர் ஜெயபால் பங்கேற்றனர்.
தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ., செல்லம்மாள் ஐ.டி.ஐ., ஜெயராஜ் ஐ.டி.ஐ., மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர். இவர்களில் 46 பேர் பாக்ஸ்கான், ரெனால்ஸ் நிறுவனங்களில் பணிக்கு தேர்வாகினர்.