/உள்ளூர் செய்திகள்/தேனி/ பிரதமர் கவுரவ நிதி உதவி திட்டத்தில் தகுதி உடையவர்கள் இணையலாம் பிரதமர் கவுரவ நிதி உதவி திட்டத்தில் தகுதி உடையவர்கள் இணையலாம்
பிரதமர் கவுரவ நிதி உதவி திட்டத்தில் தகுதி உடையவர்கள் இணையலாம்
பிரதமர் கவுரவ நிதி உதவி திட்டத்தில் தகுதி உடையவர்கள் இணையலாம்
பிரதமர் கவுரவ நிதி உதவி திட்டத்தில் தகுதி உடையவர்கள் இணையலாம்
ADDED : மே 15, 2025 05:09 AM
தேனி: பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணையாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் 20வது தவணை ஜூனில் வழங்கப்பட உள்ளது. இந்த திட்ட பயனாளிகள் 6544 பேர் இன்னும் நில உடமை பதிவு செய்யவில்லை. இந்த பதிவை மேற்கொண்டால் மட்டும் அடுத்த தவணை கிடைக்கும். தகுதியான விடுபட்ட விவசாயிகளும் புதிதாக இணையலாம்.
இதற்காக வேளாண் இணை இயக்குநர், அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள், போஸ்டல் பேமண்ட் வங்கி, பொது சேவை மையங்களில் சிறப்பு முகாம் மே 31 வரை நடக்கிறது.
இந்த முகாமில் விவசாயிகள் நில விபரங்கள், வங்கி கணக்குடன் ஆதார் இணைத்தல், இ .கே.ஒய்.சி., செய்து கொள்ளலாம். மேலும் பயனாளிகள் இறந்த பின் தவணை பெறுவது குற்றமாகும்.
இது ஆய்வில் தெரியவந்தால், தொகையை பெற்றவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங்தெரிவித்துள்ளார்.