/உள்ளூர் செய்திகள்/தேனி/ மகனுக்கு தானமாக வழங்கிய சொத்தினை ரத்து செய்ய வேண்டும் முதிய தம்பதி குறைதீர் கூட்டத்தில் மனு மகனுக்கு தானமாக வழங்கிய சொத்தினை ரத்து செய்ய வேண்டும் முதிய தம்பதி குறைதீர் கூட்டத்தில் மனு
மகனுக்கு தானமாக வழங்கிய சொத்தினை ரத்து செய்ய வேண்டும் முதிய தம்பதி குறைதீர் கூட்டத்தில் மனு
மகனுக்கு தானமாக வழங்கிய சொத்தினை ரத்து செய்ய வேண்டும் முதிய தம்பதி குறைதீர் கூட்டத்தில் மனு
மகனுக்கு தானமாக வழங்கிய சொத்தினை ரத்து செய்ய வேண்டும் முதிய தம்பதி குறைதீர் கூட்டத்தில் மனு
ADDED : ஜூன் 03, 2025 12:51 AM

தேனி: ''சி.ஆர்.பி.எப்., போலீஸ்காரராக பணிபுரியும் தனது மகன் தானமாக சொத்தை எழுதி வாங்கி கொண்டு முதுமை காலத்தில் தன்னை கவனிக்கவில்லை.
இதனால் அவருக்கு வழங்கிய சொத்துப் பத்திரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.'' என, கலெக்டர் அலுவலகத்தில் கண்டமனுாரை சேர்ந்த முதிய தம்பதி மனு அளித்தனர்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி முன்னிலை வகித்தார். இலவச வீட்டு மனைபட்டா, தையல் இயந்திரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
கண்டமனுார் அரண்மனைத் தெரு முருகேசன், அவரது மனைவி சுந்தரவள்ளி மனுவில், ''எங்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூன்றாவது மகன் சி.ஆர்.பி.எப்., போலீஸ்காரராக பணிபுரிகிறார்.
இவர் திருமணத்திற்கு நகைகள் செய்து கொடுத்தோம். வீட்டை தானமாக எழுதி வழங்கினோம். இவற்றை பெற்றுக்கொண்டு எங்களை கவனிக்கவில்லை. பெரியகுளம் ஆர்.டி.ஓ.,விடம் புகார் அளித்தோம். அவர் மூன்றாவது மகன் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்க கூறியிருந்தார். சில மாதங்கள் மட்டும் மருமகள் பணம் வழங்கினார். பின் அதனையும் நிறுத்தி விட்டார்.
இதனால் மருத்துவச் செலவு, உணவிற்கு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏமாற்றி வாங்கிய சொத்து, நகையை மீட்டுத்தர வேண்டும். மகனை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும்.'', என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் தர்மர் வழங்கிய மனுவில், ''தேனி மதுரை ரோட்டில் ராஜாகளம் பகுதி உள்ளது.
இங்கு ஆதிதிராவிடர்களுக்கு உரிய நிலத்தை, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பத்திரப்பதிவு செய்து பட்டா பெற்றனர்.
இந்த பதிவு, பட்டாவை ரத்து செய்ய ஆதிதிராவிடர், பழங்குடியின மாநில ஆணையம் 2024 டிசம்பரில் உத்தரவிட்டது.
மேலும் நிலத்தின் வாரிசு தாரரிடம் ஒப்படைக்க கூறியது. அதன்படி வாரிசு தாரர்களிடம் ஒப்படைக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.'', என்றிருந்தது.
கெங்குவார்பட்டி பொது மக்கள் சார்பில் ராமர்கோவில் தெரு சுப்பிரமணி வழங்கிய மனுவில், ''ஊர் மயானத்திற்கு செல்லும் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது.
ரோட்டில் கழிவு நீர் செல்கிறது. இதில் பொது மக்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது.
பேரூராட்சியில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கழிவு நீர் கால்வாய் அமைத்து, ரோடு சீரமைத்துத்தர உத்தரவிட வேண்டும்.'' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் நாகராஜ் வழங்கிய மனுவில், ''தேனி பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் பொது மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். இலவச கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
கட்டண கழிப்பறைகளில் அதிகம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும். பொது மக்களின் தேவைக்காக பொதுத்துறை வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களை நிறுவ ஏற்பாடு செய்திட வேண்டும்.'' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.