ADDED : மார் 23, 2025 07:19 AM
தேனி : மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்விச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுற்றுலா வாகனத்தை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார். கவுமாரியம்மன் கோயில், கர்னல் ஜான்பென்னிகுவிக் மண்டபத்தை மாணவர்கள் பார்வையிட்டனர். சுற்றுலாவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி தலைமையில் அலுவலர்கள் ஒருங்கிணைத்தனர்.