ADDED : செப் 17, 2025 03:48 AM
தேனி : மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கி சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் இன்று தேனி கம்மவார் சங்க தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
முகாம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00மணி வரை நடக்கிறது. பொறியியல், மருத்துவம், வேளாண், தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், கலை, அறிவியல், சட்டம், தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் படிக்கம் மாணவர்கள் பங்கேற்கலாம். கல்வி கடன் பெற 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், முகவரி சான்று, முதல் பட்டதாரி சான்று, வருமானசான்று, வங்கி கணக்குபுத்தகம், புகைப்படம், கல்வி நிறுவனத்தின் போனோபைடு சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். வெளியூரில் தங்கி பயிலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். முகாமை பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.