Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இருமடைகளும் சேதமடைந்ததால் குளத்தில் நீர் தேங்காத நிலை பட்டத்தி்க்குளம் ஆயக்கட்டுதாரர்கள் நீரை விலைக்கு வாங்கும் அவலம்

இருமடைகளும் சேதமடைந்ததால் குளத்தில் நீர் தேங்காத நிலை பட்டத்தி்க்குளம் ஆயக்கட்டுதாரர்கள் நீரை விலைக்கு வாங்கும் அவலம்

இருமடைகளும் சேதமடைந்ததால் குளத்தில் நீர் தேங்காத நிலை பட்டத்தி்க்குளம் ஆயக்கட்டுதாரர்கள் நீரை விலைக்கு வாங்கும் அவலம்

இருமடைகளும் சேதமடைந்ததால் குளத்தில் நீர் தேங்காத நிலை பட்டத்தி்க்குளம் ஆயக்கட்டுதாரர்கள் நீரை விலைக்கு வாங்கும் அவலம்

ADDED : செப் 04, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
பெரியகுளம்: பட்டத்திக்குளம் நீர் வரத்து வாய்க்கால் சீரமைக்காததால் அருகேயுள்ள தென்னை, மா தோட்டத்திற்கு தண்ணீர் விலைக்கு வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் கும்பக்கரை ரோட்டில் மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்திற்கு உட்பட்டது பட்டத்திக்குளம். 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்திற்கு கும்பக்கரை அருவியிலிருந்து வெளியேறும் நீர் வாய்க்கால் வழியாக குளத்திற்கு தண்ணீர் வருகிறது. இக் குளம் பெரும்பாலான மாதங்களில் நீர் நிறைந்து இருக்கும். இந்த நீரினால் கீழப்புரவு சச்சுமடையில் துவங்கி பூலாங்குளம் புரவு வரை 4 கி.மீ., தூரத்திற்கு, பல நுாறு ஏக்கரில் நெல், கரும்பு சாகுபடி நடந்தது. பல கிணறுகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. குளத்தை ஆண்டுக்கு ஆண்டு ஆக்கிரமிப்பு அதிகரித்ததால் 20ஏக்கர் வரை ஆக்கிரமிப்பில் உள்ளது. இதில் ஆக்கிரமிப்பாளர்கள் தென்னை, மா மரங்கள் வளர்த்து உள் குத்தகைக்கு விடுகின்றனர். எஞ்சிய பகுதியில் களைச் செடிகள் அதிகம் வளர்ந்து குளம் பாழ்பட்டு வருகிறது. நீர் தேங்கும் பகுதிகளில் பாலித்தீன் கழிவுகளை கொட்டி கண்மாய்க்கு தீங்கு செய்து வருகின்றனர்.

இரு மடைகளும் சேதம் ஆயக்கட்டுதாரர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் புகார்: பட்டத்திக்குளத்தில் மேட்டுமடை, பள்ளத்து மடை இரு மடைகளும் சேதமடைந்துள்ளதால் குளத்தில் நீர் தேங்காமல் வீணாகிறது. இதனால் தேவையான பகுதிக்கு தண்ணீர் செல்லாமல் வீணாகிறது. நமக்கு நாமே திட்டத்தில் மடைகளை பாதுகாக்கவும், கண்மாய் சீரமைப்பு செய்வதற்கு நீர் வளத்துத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆயக்கட்டுதாரர்கள் அனுமதியில்லாமல் கடந்தாண்டு மீன்பாசி ஏலம் ரூ.3.29 லட்சத்திற்கு விடப்பட்டது. ஆனால் ஏலம் எடுத்தவர் பணம் செலுத்தவில்லை. இதனால் ஏலத்தை ரத்து செய்தனர். அதே நேரத்தில் ஆயக்கட்டுதாரர்களுக்கு மீன்பாசி ஏலம் வழங்கி இருந்தால், விவசாயிகள் கூடுதலாக பணம் போட்டு குளத்தை நாங்களே பராமரிப்பு செய்திருப்போம். பருவமழை துவங்குவதற்குள் நீர் வளத்துறை அவசரம், அவசியம் கருதி மடைகளை சீரமைக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது அருண், விவசாயி, பெரியகுளம் : குளத்தில் ஆக்கிரமிப்பால் கண்மாய் பரப்பளவு குறைந்து வருகிறது. குளத்தில் நிரம்பினால் சுற்றுப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிணறுகளின் நீர் மட்டம் உயர்ந்து, ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படும். குளக்கரையில் கரைகளில் பாதையில்லாமல் உள்ளது. இதனை சீரமைத்து, அறுவடை காலங்களில் விளை பொருட்களை கொண்டு செல்வதற்கு பாதை அமைத்து தர வேண்டும்.

தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம் பாண்டியன், விவசாயி, பெரியகுளம் : கண்மாய் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் நீர் வரத்து வாய்க்கால் முழுவதும் மண் மேவியுள்ளது.

இதனால் கண்மாய் அருகே நூறு மீட்டர் தூரத்தில் உள்ள தென்னை, மா கன்றுகளை வளர்ப்பதற்கு தண்ணீரை டிராக்டரில் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு சர்வே செய்த நீர்வளத்துறையினர் தற்போது கண்டும் காணாமல் உள்ளனர்.-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us