/உள்ளூர் செய்திகள்/தேனி/ தனிமையை தவிர்த்தால் தற்கொலை தவிர்க்கலாம்; விழிப்புணர்வில் நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., பேச்சு தனிமையை தவிர்த்தால் தற்கொலை தவிர்க்கலாம்; விழிப்புணர்வில் நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., பேச்சு
தனிமையை தவிர்த்தால் தற்கொலை தவிர்க்கலாம்; விழிப்புணர்வில் நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., பேச்சு
தனிமையை தவிர்த்தால் தற்கொலை தவிர்க்கலாம்; விழிப்புணர்வில் நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., பேச்சு
தனிமையை தவிர்த்தால் தற்கொலை தவிர்க்கலாம்; விழிப்புணர்வில் நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., பேச்சு
ADDED : செப் 11, 2025 07:16 AM

தேனி : தேனி அரசு மனநல மருத்துவமனை வளாகத்தில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக வளாகத்தில் துவங்கிய ஊர்வலத்தை தேனி டி.எஸ்.பி., முத்துக்குமார் துவக்கி வைத்தார். ஊர்வலம் பழைய ஜி.ஹெச்., ரோடு, பெரியகுளம் ரோடு, சீஞ்சீவி காபி நிலையம் வழியாக சமதர்மபுரம் சென்று அங்கிருந்து மருத்துவமனை வளாத்தில் நிறைவு பெற்றது.
பின் நடந்த விழிப்புணர்வு நிகழ்வில் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் தேன்மொழி, கண்காணிப்பாளர் டாக்டர் விஜயஆனந்த் தலைமை வகித்தனர். நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமரன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனநல மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்வெங்கடேஷ், 'தற்கொலை எண்ணம் ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் விளைவுகள், அறிகுறிகள் குறித்து பேசி, அனைவரையும் வரவேற்றார். கணகாணிப்பாளர் விஜயஆனந்த் பேசுகையில், 'மன நல மருத்துவமனை மாநிலத்தில் 2வது மன நல ஆராய்ச்சி மையமாக உருவாக என்னாளான முழு முயற்சி எடுப்பேன்.' என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டி.எஸ்.பி., பேசுகையில், 'துாக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்டவைதான் தற்கொலை எண்ணங்கள் ஏற்பட முக்கிய காரணம். மன அழுத்தமும், பிரச்னைகளும் ஏற்படும் நேரத்தில் அந்நபர் தனக்குள் பிரச்னைகளை எளிதாக கையாள சிந்தனையை மாற்றி கொள்ள வேண்டும். நேர்மறையான எண்ணங்களை கொண்டு வர வேண்டும். தனிமையை தவிர்க்க வேண்டும். இதனால் தற்கொலை எண்ணங்கள் எழாது. எனக்கூறியவர், தனது பணி அனுபவம் மூலம் கிடைத்த 2 கதைகளை கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வில் பாட்டு, பேச்சு, போஸ்டர், கவிதை, ரங்கோலி போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மருத்துவக்கல்லுாரி நர்சிங் கல்லுாரி மாணவிகள், தேனி மருத்துவக்கல்லுாரி இளநிலை மாணவிகள், என்.ஆர்.டி., மருத்துவக் கல்லுாரி மாணவிகளுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி பாராட்டப்பட்டனர். உதவி பேராசிரியை சந்திரஜோதி நன்றி தெரிவித்தார்.