ADDED : செப் 30, 2025 04:51 AM
கூடலுார்: கூடலுாரில் இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நகரச் செயலாளர் சாகுல் தலைமையில் நடந்தது.
பள்ளிவாசல் தெரு, நடுத்தெரு, மெயின் பஜார் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ரபீக், வாசிம் அக்ரம், அஜ்மல் கான், பரித், அப்துல் ரகுமான், உமர்பாருக், அம்சத் கான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


