/உள்ளூர் செய்திகள்/தேனி/ வறட்சியால் காய்ந்த மேய்ச்சல் நிலங்கள் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு வறட்சியால் காய்ந்த மேய்ச்சல் நிலங்கள் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு
வறட்சியால் காய்ந்த மேய்ச்சல் நிலங்கள் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு
வறட்சியால் காய்ந்த மேய்ச்சல் நிலங்கள் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு
வறட்சியால் காய்ந்த மேய்ச்சல் நிலங்கள் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு
ADDED : செப் 11, 2025 05:31 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் மழை இல்லாததால் கடந்த சில வாரங்களாக வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. மானாவாரி நிலங்களில் விவசாயம் முற்றிலும் இல்லை. இறவை பாசன நிலங்களில் மட்டும் விவசாயம் தொடர்கிறது.
ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு உப தொழிலாக உள்ளது.
கால்நடை வளர்ப்பில் கறவை மாடுகளை வீடுகள், தோட்டங்களில் கொட்டம் அமைத்து பராமரிக்கின்றனர். ஆயிரக்கணக்கான வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், நாட்டு மாடுகளை அன்றாடம் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்று இரவில் அதற்கான கொட்டத்தில் அடைத்து வைக்கின்றனர்.
இரவில் அவைகளுக்கு தீவனம் தரப்படுவதில்லை.
ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை இல்லை. வெயில், காற்றின் தாக்கம் அதிகம் இருப்பதால் புல் பூண்டுகள் காய்ந்து மேய்ச்சல் நிலங்கள் வறண்டு விட்டன.
மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு மாடுகள் தீவனம் மற்றும் தண்ணீருக்காக பல கி.மீ., துாரம் சென்றுதிரும்பும் நிலை ஏற்படுகிறது. உடன் செல்லும் கால்நடை பராமரிப்பாளர்கள், வளர்ப்பவர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் நிலை உள்ளது. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் கால்நடைகள் குடிப்பதற்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள் பலவும் தற்போது பராமரிப்பு இன்றி செயல் இழந்து கிடக்கின்றன.
இதே நிலை இன்னும் சில வாரங்கள் நீடித்தால் வளர்ப்பில் உள்ள ஆடு, மாடுகளை விற்கும் நிலை ஏற்படும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.