/உள்ளூர் செய்திகள்/தேனி/ டபுள் டெக்கர் பஸ் கண்ணாடி உடைப்பு: டிரைவர் சஸ்பெண்ட் டபுள் டெக்கர் பஸ் கண்ணாடி உடைப்பு: டிரைவர் சஸ்பெண்ட்
டபுள் டெக்கர் பஸ் கண்ணாடி உடைப்பு: டிரைவர் சஸ்பெண்ட்
டபுள் டெக்கர் பஸ் கண்ணாடி உடைப்பு: டிரைவர் சஸ்பெண்ட்
டபுள் டெக்கர் பஸ் கண்ணாடி உடைப்பு: டிரைவர் சஸ்பெண்ட்
ADDED : மே 18, 2025 03:22 AM
மூணாறு: மூணாறில் கேரள அரசு பஸ் டிப்போவில் ' டபுள் டெக்கர்' பஸ்சின் கண்ணாடி உடைந்த சம்பவத்தில் டிரைவர் பணியில் இருந்து ' சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
மூணாறின் இயற்கை அழகை பஸ்சில் பயணித்தவாறு ரசிக்கும் வகையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முற்றிலும் கண்ணாடி இழை கொண்டு உருவாக்கப்பட்ட ' டபுள் டெக்கர்' பஸ் இயக்கப்படுகிறது. பழைய மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டிப்போவில் பணிமனையில் மே 13 இரவில் பஸ்சை நிறுத்த முயன்றபோது, அதன் மேல் கூரையில் மோதி மேல் தளம் கண்ணாடி சேதமடைந்தது. அச்சம்பவத்தை மூடி மறைக்கும் நோக்கத்தில் அதிகாரிகளின் உதவியுடன் டிப்போவில் பாதுகாக்கப்பட்ட மாற்று கண்ணாடி உடனடியாக பொருத்தப்பட்டு மறுநாள் வழக்கம் போல் பஸ் இயக்கப்பட்டது. இந்நிலையில் கண்ணாடி உடைந்த சம்பவம் குறித்து அரசு போக்குவரத்து கழக விஜிலன்ஸ் பிரிவினர் விசாரணை நடத்தினர். அதில் அடிமாலி, இரும்பு பாலத்தைச் சேர்ந்த டிரைவர் சித்திக் 43, பஸ்சை அலட்சியமாக ஓட்டியதால் கண்ணாடி உடைந்ததாக தெரியவந்தது. அவரை பணியில் இருந்து ' சஸ்பெண்ட்' செய்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் நேற்று உத்தரவிட்டார்.
இதே ரீதியில் பிப்.18ல் டிப்போவில் டபுள் டெக்கர் பஸ் கண்ணாடி உடைந்த சம்பவத்தில் பணிமனை ஊழியர் பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.


