Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ டபுள் டெக்கர் பஸ் விபத்து டிரைவர் 'சஸ்பெண்ட்'

டபுள் டெக்கர் பஸ் விபத்து டிரைவர் 'சஸ்பெண்ட்'

டபுள் டெக்கர் பஸ் விபத்து டிரைவர் 'சஸ்பெண்ட்'

டபுள் டெக்கர் பஸ் விபத்து டிரைவர் 'சஸ்பெண்ட்'

ADDED : செப் 19, 2025 02:26 AM


Google News
மூணாறு: ' டபுள் டெக்கர்' பஸ் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் டிரைவர் பணியில் இருந்து ' சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

மூணாறின் இயற்கை அழகை பஸ்சில் பயணித்தவாறு ரசிக்கும் வகையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ' டபுள் டெக்கர்' பஸ் சேவை பிப்.8ல் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த பஸ் முற்றிலும் கண்ணாடி இழை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பழைய மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டிப்போவில் இருந்து தினமும் மூன்று முறை பஸ் இயக்கப்படுகிறது. மூணாறில் இருந்து கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆனயிரங்கல் அணையின் 'வியூ பாய்ண்ட்' வரை சென்று திரும்பும்.

செப்.12ல் மதியம் 12:30 மணிக்கு டிப்போவில் இருந்த 45 சுற்றுலா பயணிகளுடன் சென்ற பஸ் ஆனயிரங்கல் வியூ பாய்ண்ட் சென்று விட்டு திரும்புகையில், மூணாறு அருகே தேவிகுளம் இறைச்சல்பாறை பகுதியில் விபத்தில் சிக்கியது. பயணிகள் காயம் இன்றி தப்பினர்.

எதிரில் தவறாக வந்த கார் மீது மோதி விடாமல் தவிர்க்க பஸ்சை திருப்பிய போது விபத்து ஏற்பட்டதாக டிரைவர் தெரிவித்தார். அதன்படி சம்பவத்தின் போது கடந்த சென்ற கார் டிரைவர் அடிமாலியைச் சேர்ந்த முகம்மதுபரீத் மீது அலட்சியமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக தேவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பஸ் எதிரில் கார் எதுவும் செல்லவில்லை என தெரியவந்தது. அதனால் அலட்சியமாக பஸ் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக டிரைவர் முகம்மது பணியில் இருந்து' சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us