/உள்ளூர் செய்திகள்/தேனி/ தி.மு.க.,மாநில கபடி போட்டி: திருவாரூர் ஒட்டன்சத்திரம் அணிகள் முதலிடம் தி.மு.க.,மாநில கபடி போட்டி: திருவாரூர் ஒட்டன்சத்திரம் அணிகள் முதலிடம்
தி.மு.க.,மாநில கபடி போட்டி: திருவாரூர் ஒட்டன்சத்திரம் அணிகள் முதலிடம்
தி.மு.க.,மாநில கபடி போட்டி: திருவாரூர் ஒட்டன்சத்திரம் அணிகள் முதலிடம்
தி.மு.க.,மாநில கபடி போட்டி: திருவாரூர் ஒட்டன்சத்திரம் அணிகள் முதலிடம்
ADDED : மே 30, 2025 03:36 AM

தேனி: தேனியில் வடக்கு மாவட்ட தி.மு.க, சார்பில் நடந்த முப்பெரும் விழாவை முன்னிட்டு மாநில கபடி போட்டி நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் திருவாரூர் மாவட்டம்,கட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், பெண்கள் பிரிவில் ஒட்டன்சந்திரம் எஸ்.எம்.பி.கே.சி., அணிகள் முதலிடம் பெற்றது.
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் முப்பெரும் விழாவை முன்னிட்டு மாநில ஏ கிரேடு கபடி போட்டிகள் நடந்தன.
போட்டிகளில் சேலம், தேவாரம், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அணிகள் பங்கேற்றன.
நேற்று இறுதி போட்டிகள் நடந்தன. இதில் ஆண்கள் பிரிவில் திருவாரூர் மாவட்டம் கட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடம் பெற்று ரூ. 1 லட்சம் பரிசு தொகையும், சேலம் பிரைஸ் கபடி அணி இரண்டாமிடம் பெற்று, ரூ.75 ஆயிரம் பரிசுத் தொகை, சான்றிதழ் பெற்றன.
பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.பி.கே.சி. அணி முதலிடம் பெற்று ரூ.1 லட்சம் பரிசு பெற்றது. கரூர் சேரன் உடற்கல்வியல் கல்லுாரி அணி இரண்டாமிடம் பெற்று ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகை பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் கேடயம், பரிசுத் தொகை, சான்றிதழ் வங்கி பாராட்டினார். பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.