/உள்ளூர் செய்திகள்/தேனி/புதிய வகை கொரோனா எளிதில் பரவுவதால் முக கவசம் அவசியம் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் எச்சரிக்கைபுதிய வகை கொரோனா எளிதில் பரவுவதால் முக கவசம் அவசியம் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் எச்சரிக்கை
புதிய வகை கொரோனா எளிதில் பரவுவதால் முக கவசம் அவசியம் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் எச்சரிக்கை
புதிய வகை கொரோனா எளிதில் பரவுவதால் முக கவசம் அவசியம் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் எச்சரிக்கை
புதிய வகை கொரோனா எளிதில் பரவுவதால் முக கவசம் அவசியம் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் எச்சரிக்கை
ADDED : ஜன 05, 2024 05:22 AM

தேனி : உருமாறிய ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் தொற்று எளிதாக பரவும் தன்மை கொண்டதால் முக கவசம் அணிந்து செல்வது அவசியமாகும். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் பொது இடங்கள், மருத்துவமனைகள், பொழுது போக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.' எனமாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் (பொ) பா.குமரகுருபரன் எச்சரித்துள்ளார்.
உருமாறிய ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சளி, உமிழ்நீர் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.
இப்பணிகள் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் இன்றி நகர்புற நலவாழ்வு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
இதில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் ஏற்படுவதால் குடிநீரை காய்ச்சி குடிக்கவும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு தண்டோரா, ஆட்டோ, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் பரவிவரும் ஜே.என்.1 வகை கொரோனா தொற்றுக்கு பின், தமிழகத்தில் சிலருக்கு உருமாறிய ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இவ்வகை தொற்று ஏற்படாமல் இருக்க மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றியும், பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து துணை இயக்குனர் தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:
கொரோனா வைரஸ் உருமாற்றம் பற்றி
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகைகளில் உருமாறியது. தற்போது அந்த உருமாற்றமானது ஜே.என்.1., வகை கேரளாவிலும், தமிழகத்தில் 4 பேர் நான்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் தற்போது மியு வகை கொரோனா பரவல் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முக்கியமாக தற்போது பரவக்கூடிய ஜே.என்.1 வகை வைரஸ் தொற்று அதிகளவில் பரவுவதால் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க அனைத்து ஆரம்ப சுகாதார, நிலையங்கள், நகர்புற நலவாழ்வு மையங்களை அறிவுறுத்தி உள்ளோம்.
இதனை எவ்வாறு அறிவது, அறிகுறிகள் குறித்து
குளிருடன் லேசான காய்ச்சல், இருமல், தொண்டைப்புண், மூக்கு ஒழுகுதல், தலைவலி ஆகியவை அறிகுறிகளாக உள்ளன. தொடர்ந்து இப்பாதிப்பு 5 நாட்களுக்கு மேல் இருந்தாலும் சளி, உமிழ்நீர் பரிசோதனைக்கு பரிந்துரைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சளி, உமிழ்நீர் பரிசோ தனை நடத்தப்படுகிறதா
சீதோஷ்ண நிலை மாறுபாட்டால் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமடைந்து விடுகின்றனர். ஆனால் ஜே.என்.1., வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவுவதால் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுவது அவசியம்.
தற்போது பரிசோதனைகள் எடுக்க வேண்டிய அவசியம் இன்றி தேனி மாவட்டம் உள்ளது. இதுவரை யாருக்கும் அறிகுறிகள் தென்பட வில்லை. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அறிகுறிகள் தெரிந்தால் குறிப்பிட்ட நபர்களின் விபரங்கள் அளிக்க அறிவுறுத்தி உள்ளோம். மருத்துவக் கல்லுாரியில் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பரிசோதனை செய்யும் வசதியும் உள்ளது.
பாதுகாப்பு வழிகாட்டுதல் பற்றி
இப்புதிய வகை தொற்று அதிகளவில் பரவக்கூடியது என்பதால் சமூக இடைவெளி, முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்துவதுடன், கைகளை அடிக்கடி கழுவுவது சிறந்த பயனை அளிக்கும்.
குறிப்பாக எளிதில் 0 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள், சிறார்களை பொது இடங்களுக்கு அழைத்து செல்வதை பெற்றோர்கள், உறவினர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு இத்தொற்று எளிதாக பரவிவிடும்.
கொரோனா பாதிப்பிற்குள்ளானவர்கள் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமா
இது புதிய கொரோனா ஜே.என்.1., வகை வைரஸ் ஆகும். இதன் பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பு வரை சென்றுள்ளது. ஏற்கனவே கொரோனா, ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களை கட்டாயமாக பாதிப்பு ஏற்படும்.
அதனால் முகக்கவசம் அணிவது அவசியம். பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக கோயில்கள், சர்ச்கள், மசூதிகளில் கூட்டமாக பங்கேற்பது, பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். மேலும் வெளியூர், வெளிநாடு சென்று வீட்டிற்கு வருபவர்கள் வீட்டில் தனிமையில் இருப்பது அவசியம்.
முக்கியமாக அடிக்கடி கைகளை கழுவுவது சிறந்த பயனளிக்கும்.', என்றார்.