/உள்ளூர் செய்திகள்/தேனி/ புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் திணறல் புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்
புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்
புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்
புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்
ADDED : ஜூன் 30, 2025 04:26 AM
தேனி : மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார், உணவுப் பாதுகாப்புத்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றனர்.
மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை அனைத்து அரசுத்துறைகள் இணைந்து பல்வேறு சோதனைகள் நடத்தி வருகின்றன. ஆனால், புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க முடியாமல் துறை அதிகாரிகள் தடுமாறி வருகின்றனர். கல்வி வளாகங்கள், பொது இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றி கடைகளுக்கு சீல் வைக்கின்றனர். ஆனால், மீண்டும் அதே கடைகளில் அப்பொருட்கள் விற்பனை செய்வது மாவட்டம் முழுவதும் தொடர்கிறது. வாரந்தோறும் போலீசார் பல்வேறு வழக்குகள் பதிந்தாலும், விற்பனையை முழுவதும் தடுக்க முடியாதது வேதனையளிக்கிறது.
ஆய்வுக்கு செல்லும் போது முன்கூட்டியே சில கடைகாரர்களுக்கு தகவல் தெரிவதால் அப்பொருட்களை மறைத்து வைக்கின்றனர். சிலர் வீடுகளில் வைத்து விற்பனை செய்து கடந்த காலங்களில் பிடிபட்டுள்ளனர். போதைப் பொருட்கள் சில்லரை விற்பனையை தடைசெய்ய முயற்சிப்பது வரவேற்க தக்கது. அதே சமயம் மாவட்டத்திற்குள் இப்பொருட்கள் எப்படி வருகிறது என்பதை ஆராய்ந்து அதனை முழுவதுமாக தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.